Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23வது மாடியில் இருந்து குதித்த 25 வயது இளம்பெண்.. 2 துண்டாக சிதறிய உடல்..!

Siva
செவ்வாய், 27 மே 2025 (13:37 IST)
மும்பையின் விக்ரோலியின் கண்ணம்வார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் 23வது மாடியிலிருந்து குதித்த 25 வயது பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்  தெரிவித்தனர்.  
 
மரணமடைந்தவர் ஹர்ஷதா டாண்டோல்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருக்கு மனநலக்குறைவுகள் இருந்ததாக கூறப்படுகின்றது. எனினும், தற்கொலைக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை.
 
டாண்டோல்கர் 23வது மாடியிலிருந்து கீழே குதித்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மேல் விழுந்தபோது, அவரது உடல் இரண்டாக சிதறி விழுந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
உடனடியாக அக்கம்பக்கத்து மக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவம் குறித்து காரணம் தெரியாத மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்ணுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதா அல்லது வேலை பார்க்கும் இடத்தில் நெருக்கடியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை பின்னர் தீவிரமான விசாரணை தொடங்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments