க்யூட் தேர்வை ஏற்க மறுக்கும் 22 மத்திய பல்கலைக்கழகங்கள் : சிக்கலில் யுஜிசி
இந்தியாவில் மொத்தம் உள்ள 54 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் க்யூட் தேர்வை ஏற்க மறுத்ததால் யுஜிசிkகு சிக்கல் ஏற்பட்டுள்ளது
பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு க்யூட் தேர்வு கட்டாயம் எழுத வேண்டுமென சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது
இதற்கு சில பல்கலைக்கழகங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஒருசில பல்கலைக்கழகங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டது
இந்த நிலையில் தற்போது மொத்தம் உள்ள 54 பல்கலைக்கழகங்களில் 22 பல்கலைக்கழகங்கள் க்யூட் தேர்வை ஏற்க மறுத்துள்ளது. மீதமுள்ள 32 பல்கலைக்கழகங்கள் மட்டுமே கியூட் தேர்வுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் யுஜிசிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது