Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்

Advertiesment
10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்
, சனி, 16 ஜூன் 2018 (09:39 IST)
ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும்,  தங்குமிடம் இலவசமுமாய் வழங்கப்படுகிறது பலரை ஆச்சரியத்திற்கு ஆளாக்கியுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் தங்குமிடத்திற்கும், உணவிற்குமே வாங்கும் சம்பளத்தின் முக்கால்வாசிப் பணம் செலவாகிப் போகிறது. அப்படி இருக்கும் வேளையில் ஐதராபாத்தில் 10 ரூபாய்க்கு 2 வேலை உணவும் தங்குமிடமும் வழங்கப்படுவது ஆச்சரியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
 
ஐதராபாத்தில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே சேவா பாரதி என்ற அமைப்பு, நோயாளிகளைக் காண வரும் உறவினர்கள், குடும்பத்தாருக்கு 10 ரூபாய்க்கு  இரு வேளை உணவும், தங்குமிடத்தையும் மக்களுக்கு அளித்து வருகிறது.
webdunia
இந்த அமைப்பின் உன்னதமான சேவையால் பல ஏழை நோயாளிகள், மற்றும் அவர்களது உறவினர்கள் மிகவும் பயனடைகின்றனர். இந்த அமைப்பின் சேவையை பலர் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வி.ஹெச்.பி, பஜ்ரங் தள் பயங்கரவாத அமைப்புகள்: சி.ஐ.ஏ அறிவிப்புக்கு கண்டனம்