ரூபாய் நோட்டு விவகாரத்தில் இதுவரை 586 இடங்களில் ரூ.2,900 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற பல்வேறு விதிமுறைகள் மத்திய ரிசர்வ் வங்கி விதித்தது.
வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கான வருமானம் குறித்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. அதன்படி வருமான வரித்துறையினர் பல்வேறு சோதனைகளில் ஈடுப்பட்டனர்.
அதில் கணக்கில் வராத தொகையை மறைத்து வைத்திருந்தவர்கள் சிக்கினர். அதில் பெரும்பாலும் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் சிக்கியது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் இதுவரை வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் நாடு முழுவதும், 586 இடங்களில் ரூ.2,900 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் தான் அதிக தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.