Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலி செய்திகள்: புதிய அம்சங்களை அறிவித்தது ஃபேஸ்புக்

Advertiesment
போலி செய்திகள்: புதிய அம்சங்களை அறிவித்தது ஃபேஸ்புக்
, வெள்ளி, 16 டிசம்பர் 2016 (14:21 IST)
உலகிலேயே மிக பெரிய சமூக ஊடக வலைதளமாக விளங்குகின்ற ஃபேஸ்புக் (முகநுல்) போலி செய்திகள் பரப்பப்படாமல் இருப்பதற்கு புதிய அம்சங்களை தன்னுடைய வலைதளத்தில் அறிவித்திருக்கிறது.


 

போலியான தகவல்களை பரப்புவதற்கு எதிராக வடிவமைக்கப்பட்ட மாற்றங்களோடு, புதிதான செய்திகளை அறிக்கையிடுவதில் புதிய அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி செய்திகள் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி இருப்பதாக, பயன்பாட்டாளர்கள் சிலர் ஃபேஸ்புக்கை கடந்த மாதம் விமர்சனம் செய்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் இந்த புதிய அம்சங்கள், போலி செய்திகளை குறித்து எச்சரிக்கை விடுப்பதோடு, ஃபேஸ்புக் செயல்படும் சூத்திரத்தில் ஏற்பட சாத்தியமாகும் எதிர்கால மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ளன.

"உண்மைக்கு மத்தியஸ்தம் செய்வோராக விளங்க எங்களுக்கே முடியாத நிலையில், மக்களுக்கு அதற்கான குரலை வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, இந்த பிரச்சனையை மிகவும் கவனமாக அணுகுகின்றோம்" என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.

webdunia

 

சமூக ஊடகமான ஃபேஸ்புக், அதனுடைய செய்தி அறிக்கையிடும் அம்சத்தில், "இதுவொரு போலி செய்தி" என்ற புதிய தலைப்பை சேர்த்திருக்கிறது. தற்போது இந்த செய்தி அறிக்கை அம்சமானது "ஸ்பேம்" அல்லது பிற "ஆத்திரமூட்டும்" உள்ளடக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், "சர்ச்சைக்குள்ளான" செய்திகள் என்ற தலைப்பையும் பேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இத்தகைய செய்திகளை உண்மையை கண்டறியும் மூன்றாவது நிறுவனங்களோடு உறுதிசெய்யவும் இருப்பதாக ஃபேஸ்புக் குறிப்பிடுகிறது.

உண்மையை சோதித்து அறியும் நிறுவனங்கள், ஒரு கொள்கை நெறிமுறையோடு இதில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.

ஃபேஸ்புக்குடன் கையெழுத்திட்ட செய்தி நிறுவனங்கள் உள்பட பல நாடுகளில் 43 நிறுவனங்கள் உள்ளன.

ஃபேஸ்புக் எடுத்திருக்கும் இந்த தீர்மானத்தின்படி விண்ணப்ப செயல்முறைகளை "மீளாய்வு" செய்ய போவதாக, இந்த திட்டத்தில் செயல்படும் போயின்டெர் நிறுவனம் கூறியிருக்கிறது.

உண்மையை சோதித்து அறிந்த பிறகு, அந்த செய்தி போலியானது என்று தெரிய வந்தால், அந்த செய்திக்கு கீழே அது ஏன் போலியானது? என்று விவரிக்கும் இணைப்பு வழங்கப்படும். இந்த இணைப்பு மக்களின் சமூக தரவேற்றங்களின் கீழேயும் தென்படலாம்.

சர்ச்சைக்குரிய செய்திகள் போலியானதாக இருக்குமானால் பகிரப்படுவதற்கு முன்னால் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படும்.

மேலும், எதிர்காலத்தில் அறிமுகப்படுத்துவதற்கு சாதகமான அம்சங்களையும் ஃபேஸ்புக் நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

முக்கிய வெளியீட்டாளர்களை போல நடித்து, இணையதளங்களையும் அல்லது தாங்களே எல்லா செய்திகளையும் அறிந்துகொள்ள முக்கியமான செய்தி ஆதாரம் என்று காட்டிக்கொண்டு, வாசிப்போரை தவறாக வழிநடத்துகின்ற இணையதளங்களையும் தண்டிப்பது தொடர்பாகவும் வழிகளை தேடி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆண் வாரிசு இல்லை: மனைவி, மகளை கொடுமையாய் தாக்கிய வழக்கறிஞர் (வீடியோ)