இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கிய 19 வயது இளம்பெண்: அதிர்ச்சியில் ஃபாலோயர்கள்

Mahendran
வெள்ளி, 3 ஜனவரி 2025 (16:50 IST)
19 வயது இளம் பெண் இன்ஸ்டாகிராம் நேரலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 19 வயது அங்கூர் என்ற இளம் பெண் டிசம்பர் 29 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீம் செய்து கொண்டிருந்தார். அவரது நேரலையை சுமார் 20க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் நேரலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது நேரலையை பார்த்துக் கொண்டிருந்தவர்கள்,  அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டு உடனடியாக தடுக்க முயன்றனர். மேலும், சிலர் அவர் வீட்டிற்கு விரைந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள், அங்கூர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அவரது பெற்றோர் ஹைதராபாத்தில் கூலி தொழிலாளர்களாக இருப்பதாகவும், காதலில் ஏற்பட்ட மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அங்கூர் மொபைல் போனில் தான் நேரத்தை செலவிடுவார் என்றும் கிராம மக்கள் கூறிய நிலையில், அவருடைய செல்போனை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அவருடைய காதலன் யார் என்பதை கண்டுபிடிக்கவும் போலீசார் தீவிர முயற்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்லா காரில் சென்றதால் தான் கல்லூரி மாணவி இறந்தாரா? பெற்றோர் வழக்கால் பரபரப்பு..!

இப்படி செய்வது ரொம்ப தப்பு.. அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய பினராயி விஜயன்..!

அமெரிக்க அரசு முடக்கத்தால் இந்திய பங்குச்சந்தை பாதிப்பா? இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. நேற்று போல் மாலையில் உயருமா? இன்று ஒரு சவரன் எவ்வளவு?

இந்திய திரைப்படம் திரையிட்ட தியேட்டரில் துப்பாக்கி சூடு.. கனடாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments