19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு: உடனடியாக மூடப்பட்ட பள்ளி!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:55 IST)
கேரள மாநிலத்தில் எர்ணாகுளத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 19 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து அந்த பள்ளி உடனடியாக மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாடு என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் அவர்களில் சிலருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அந்த மாணவ மாணவிகளை பரிசோதனை செய்தபோது அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க உடனடியாக பள்ளி மூடப்பட்டதாகவும் பள்ளி வளாகம் வகுப்பறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
மீண்டும் பள்ளி திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

2 வாரம் லீவு எடுத்த மழை! அப்புறம் தொடங்கப்போகும் அதிரடி!

சீனாவை அடக்க புது ப்ளான்! ஜப்பானோடு கைக்கோர்த்த அமெரிக்கா! - என்ன டீலிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments