Webdunia - Bharat's app for daily news and videos

Install App

249வது நாளிலும் மாறாத பெட்ரோல் டீசல் விலை.. எப்போதுதான் குறையும்?

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (07:53 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த 248 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று 249வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. 
 
ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே நஷ்டம் அடைந்திருக்கும் நிலையில் அந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வரை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படாது என மத்திய அமைச்சர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments