புதுடெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இள்ம்பெண் காருக்குள் வைத்து சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
புதுடெல்லி நஜப்கார் பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் நேற்றும் மதியம் தனது இரு ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விருந்துக்கு சென்றார். விருந்தை முடித்து விட்டு கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு பென்ஸ் காரில் வீடு திரும்பினார்.
வீடு அருகே கார் வந்து நின்றது. இளம்பெண்ணின் தாய் மகளை காண வெளியே வந்தார். காரில் இருந்து முதலில் அந்த பெண்ணின் நண்பர் ஒருவர் இறங்கினார். திடீரென்று துப்பாக்கி சூடு சத்தம் கேட்டது. அந்த பெண்ணின் மற்றொரு நபர் காரை விட்டு இறங்கி ஓடினார்.
இளம்பெண்ணின் தாயும், மற்றொரு நண்பரும் காருக்குள் பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே தாயும், பெண்ணின் நண்பரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். மருத்துவமனையில் பெண் இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.
இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.