ஸ்டாலினிடம் நாஞ்சில் சம்பத் சொன்ன ரகசிய செய்தி என்ன?: நள்ளிரவில் நடந்த உரையாடல்!
ஸ்டாலினிடம் நாஞ்சில் சம்பத் சொன்ன ரகசிய செய்தி என்ன?: நள்ளிரவில் நடந்த உரையாடல்!
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் அதிமுக கட்சி சின்னம்மா துதி பாட ஆரம்பித்துள்ளது. அம்மா, அம்மா என்று கூறியவர்கள் இன்று சின்னம்மா என கூற ஆரம்பித்துள்ளனர். இது தொண்டர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா இருக்கும் போது அம்மா அம்மா என கூறிவந்த நாஞ்சில் சம்பத் ஜெயலலிதா இறந்த பின்னர் அமைதியாகிவிட்டார். சின்னம்மா சின்னம்மா என ஊடகங்களிடம் பேசும் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் காணவில்லை.
இதனால் நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வந்தன. ஆனால் நாஞ்சில் சம்பத் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அம்மா மறைந்த துயரத்தில் இருந்து தான் இன்னமும் மீளவில்லை எனவும் உடல் நலிவு காரணமாக ஆயுர்வேத சிகிச்சை எடுத்துவருவதாகவும், தான் தொடர்ந்து அதிமுகவில் நீடித்து வருவதாகவும் கூறினார்.
ஆனால் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் சேகர் பாபு எம்எல்ஏ மூலம் திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் பேசியதாக தகவல்கள் வருகின்றன. அப்போது திராவிட இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றப் போவது நீங்கள் மட்டும்தான். உங்களால் மட்டும்தான் இந்த இயக்கம் உயிர் பெறும். என்னுடைய இறுதிக் காலம் வரையில் உங்களோடு பயணிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
சசிகலா தரப்பினர் என்னைச் சந்திக்க எவ்வளவோ முயற்சி செய்தார்கள். அவர்களிடம் நான் எதுவும் பேசவில்லை. இதுவரையில் சசிகலாவை சந்திக்க நான் கார்டன் செல்லவில்லை என கூறியதாகவும் பேசப்படுகிறது.