அரசு ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு வழங்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளதை அடுத்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்த போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் சங்க தலைவர்களுடன் கர்நாடக மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 17 சதவீத சம்பள உயர்வுக்கு கர்நாடக அரசு ஒப்புக்கொண்டது. இது குறித்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டதை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்களின் முக்கிய கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டதை அடுத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற்றுக் கொண்டோம். இந்த போராட்டத்தை வெற்றி பெற வைத்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.