Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீண்டும் சொதப்பிய அக்‌ஷய் குமாரின் படம்… அதளபாதாளத்தில் முதல் நாள் வசூல்!

Advertiesment
மீண்டும் சொதப்பிய அக்‌ஷய் குமாரின் படம்… அதளபாதாளத்தில் முதல் நாள் வசூல்!
, திங்கள், 27 பிப்ரவரி 2023 (08:42 IST)
சமீப ஆண்டுகளில் அக்‌ஷய் குமார் நடிப்பில் ஒரு படம் கூட ஹிட்டாகவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் ராம்சேது திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்நிலையில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிப்பதால்தான் அவரால் எந்த படத்துக்கும் கவனம் செலுத்த முடியவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசியுள்ள அக்‌ஷய்குமார் “நான் ஆண்டுக்கு 5 படங்களில் நடிக்கிறேன். விளம்பரப் படங்களில் நடிக்கிறேன். அது எனது தொழில். நான் யாரிடமும் திருடவில்லை. இந்த கேள்வியே எனக்கு புரியவில்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் தனது தோல்விகளை ஏற்றுக் கொண்டு அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை 100 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாயாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த டிரைவிங் லைசென்ஸ் திரைப்படத்தை அக்‌ஷய் குமார் நடிப்பில் செல்பி ராஜ் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தைத் தயாரித்திருந்தது. கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் சுமார் 2.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் கடந்த சில ஆண்டுகளாக அக்‌ஷய் குமார் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே… பரபர திரில்லராக வெளியான டிரைலர்!