கடும் நிதி நெருக்கடி காரணமாக 1400 பேரை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து இருக்கும் நிலையில் தற்போது நிதி நெருக்கடி காரணமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1400 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டாளர்களின் வட்டியை மீட்க இதை தவிர வேறு வழி இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் சுமார் 60 கோடி வரை மிச்சம் பிடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது இந்நிறுவனம் சார்பில் சுமார் 30 விமானங்களுக்கு 9 ஆயிரம் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
2019 ஆம் ஆண்டு இந்திய விமான துறையில் உச்சத்தில் இருந்தது ஸ்பைஸ் ஜெட். 118 விமானங்களையும் 16,000 ஊழியர்களையும் கொண்டிருந்தது. ஆனால் இந்நிறுவனம் காலப்போக்கில் புதுப்புது போட்டி விமான நிறுவனங்கள் வரவர இதன் வருவாய் குறைந்தது.