Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹிருத்திக் ரோசனின் 'பைட்டர்' படம் பின்னடைவை சந்திக்க இதுதான் காரணம்! இயக்குனர் ஓபன் டாக்

Fighter

Sinoj

, சனி, 3 பிப்ரவரி 2024 (17:35 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோசனின் பைட்டர்  படம் பின்னடைவை சந்திக்க அப்படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாததே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ஹிருத்திக் ரோசன், ஆகேஷ் ஓபராய், அனில் கபூர் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்த படம் பைட்டர். இப்படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இப்படத்தை விநியொகம் செய்திருந்தது.  ரூ.20 கோடியில் தயாரான இப்படம் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்ததாக வெளியானது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை என கூறப்படும் நிலையில், இதுகுறித்து இயக்குனர் சித்தார்த்தா ஆனந்த் கூறியுள்ளதாவது:

90 சதவீத இந்தியர்கள் விமானத்தில் பயணம் செய்தது கிடையாது. பலர் விமான நிலையத்திற்குக் கூட சென்றதில்லை. இதனால், இப்படத்தில் காட்டப்பட்டுள்ள வான்வெளி பயணம் அவர்களுக்கு எப்படி புரியும்? எனவே பைட்டர் படம் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகாமல் போயிருக்கலாம்  என்று தெரிவித்துள்ளார்.

ஆனந்த் சித்தார்த்தாவின் கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் சீண்டலில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் 79 வயது நடிகர்!