கேரளாவில் கடந்த 6 மாதங்களில் 140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஜுலை மாதம் வரை 140 இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் 13 வயது முதல் 18 வயது வரையிலானவர்கள் என சொல்லப்படுகிறது. திஷா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.
இந்த தற்கொலைகளுக்கான காரணங்களாக குடும்ப தகராறு, காதல் தோல்வி பிரச்சனைகள், தேர்வு தோல்வி மற்றும் மொபைல் போன் பிரச்சனைகள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து ஆய்வு செய்யுமாறு உத்தரவு இட்டுள்ளது.