Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தந்தையை 50 கிமீ தள்ளுவண்டியில் தள்ளி கொண்டு சென்ற 14 வயது சிறுமி.. அதிர்ச்சி புகைப்படம்..!

தந்தையை 50 கிமீ தள்ளுவண்டியில் தள்ளி கொண்டு சென்ற 14 வயது சிறுமி.. அதிர்ச்சி புகைப்படம்..!
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (18:34 IST)
14 வயது சிறுமி தனது தந்தையை 50 கிலோமீட்டர் தள்ளுவண்டியில் தள்ளி சென்று சிகிச்சை பெற்ற அதிர்ச்சி சம்பவம்  ஒடிசா மாவட்டத்தில் நடந்துள்ளது.

ஒடிசா மாவட்டத்தைச் சேர்ந்த  சுஜாதா என்ற 14 வயது சிறுமி காயமடைந்த தனது தந்தையை 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினர்.

இதனையடுத்து அங்கிருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தூரம் தள்ளு வண்டியில் தனது தந்தையை தள்ளி கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார். இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் தகவல் தெரிந்தவுடன் அந்த சிறுமியிடம் கேட்டபோது தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனம் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் கூறினார்.

உடனடியாக பத்திரிகையாளர்கள் அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமி சுஜாதாவின் தந்தை சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உத்தரவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் தெரு நாய்களை விட அமலாக்கத்துறை தான் அதிகம் அலைகிறது: முதல்வர் ஆவேசம்..!