Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனால் தயாரிக்க 126 மையங்கள் அமைக்கப்படும் - மத்திய அரசு தகவல்

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (17:09 IST)
நாடு முழுவதும் எத்தனால் தயாரிக்க 126 மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  
கடந்த 2014 ஆம் ஆண்டு  நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு  நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி  2 வது முறையாக பதவியேற்றார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் அறித்து வரும் நிலையில், தற்போது  நடந்து வரும் பாராளுமன்றக் கூட்டத் தொடரில், மனிதர்களால் பயன்படுத்த முடியாத பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது மத்தி அரசு.

அதன்படி, கெட்டுப் போன தானியங்கள், சர்க்கரை அதிகமுள்ள கிழங்கு வகைகள், உள்ளிட்ட உணவுப் பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே  நாடு முழுவதும் எத்தனால் தயாரிக்க 126 மையங்கள் அமைக்கப்படும் எனவும், 337 கோடி லிட்டர் எத்தனால் தயாரிக்க தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments