தொடங்கப்படாத அம்பானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் மானியம் - மத்திய அரசின் தாராள மனசு

Webdunia
செவ்வாய், 10 ஜூலை 2018 (13:05 IST)
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் இன்னும் தொடங்கப்படாத உள்ள முகேஷ் அம்பானியின் ஜியோ இன்ஸ்டிடியூட்டை தலைசிறந்த நிறுவனம் என்று அறிக்கை வெளியிட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
இந்திய மக்கள் ஏற்கனவே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு சாதகமாகவே செயல் பட்டு வருகிறது. ஏராளமாக வரிச் சலுகைகள், கடன் தள்ளுபடிகள் என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலை செய்யும் மத்திய அரசு ஏன் அப்பாவி மக்களை வஞ்சிக்கிறது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தலின் போது பிரதான மத்திய கட்சிகளுக்கு நன்கொடை என்ற பெயரில் லஞ்சம் கொடுத்து மத்திய ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி விடுகின்றனர் என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.
 
மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் இந்தியாவில் செயல்பட்டு வரும் 6 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டது. அதில் ஐஐடி மும்பை, ஐஐடி டெல்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய மூன்றும் அரசு நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ள மூன்றில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1000 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
ஜியோ இன்ஸ்டிடியூட் பேப்பர் அளவிலும் கூட தொங்கப்படாத நிறுவனம். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. பின்னர், எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இடம்பிடித்தது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments