ஜியோ ஜிகா ஃபைபர்: விலை பட்டியல் கணிப்பு!

திங்கள், 9 ஜூலை 2018 (14:58 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 5 ஆம் தேதி நடந்த போது அந்த நிகழ்ச்சியில் ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை குறித்து அறிவித்தார். 
 
இந்தியா முழுவதும் 1100 நகரங்களில் சுமார் 5 கோடி வீடுகளுக்கு பிராட்பேன்ட் சேவைகளை வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். எனினும், ஜிகா ஃபைபர் சலுகைகள் மற்றும் விலை குறித்து எவ்வித தகவலும் வழங்கவில்லை. 
 
இந்நிலையில் இதன் விலை என்னவாக இருக்கும் என சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் விலை மாதம் ரூ.500 முதல் ரூ.700 முதல் துவங்கும் என்றும் குறைந்தபட்சம் 100 ஜிபி டேட்டா, 100Mbps வேகத்தில் வழங்கப்படும் என்றும், பிராட்பேன்ட் சேவையுடன் இன்டர்நெட் டிவி மற்றும் வீடியோ காலிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
 
ஆனால், ஜியோ எப்பொழுதும் இந்த ஒரு சேவையை புதிதாக அறிமுகப்படுத்தினாலும் அந்த சேவை சில மாதங்களுக்கு  இலவசமாக வழங்கப்படும். எனவே, புதிய ஜிகா ஃபைபர் சேவைகளும் இலவசமாக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு கூடிய கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி