Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலோபதி மருந்துகளால் 10 கோடி பேர் கொலை!? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பாபா ராம்தேவ்!

Prasanth Karthick
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (09:42 IST)

அலோபதி மருத்துவமுறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருந்த பாபா ராம்தேவ் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

 

 

வட இந்தியாவில் பிரபலமான சாமியாராகவும், பதஞ்சலி ஆயுர்வேத தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனராகவும் உள்ளவர் பாபா ராம்தேவ். கடந்த சில காலமாக பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பல்வேறு கருத்துகளை பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக அலோபதி மருத்துவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் 3 முறை ஆஜராகி மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ். பின்னர் அவரது அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

 

வழக்கு முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீண்டும் அலோபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பாபா ராம்தேவ். நேற்று சுதந்திர தின விழா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “நோய் நீக்கும் ஆயுர்வேத மருந்துகள் மீது யாரும் கவனம் செலுத்துவதில்லை. அதனால் அலோபதி மருந்துகளால் ஆண்டுதோறும் பலர் இறந்துக் கொண்டிருக்கின்றனர். நமக்கு தெரிந்த வரலாற்று தகவலின்படி, உலகை அடக்கி ஆள்வதற்காக ஆங்கிலேயர்கள் அலோபதி மருந்துகள் மூலம் 10 கோடி மக்களை கொன்றுள்ளனர். இஸ்லாம் மதத்தின் பெயரால் பலரை கொன்றுள்ளது. லெனின், மார்க்ஸ், மாவோ ஆகியோர் உண்டாக்கிய புரட்சியால் பல மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டனர்” என பேசியுள்ளார்.

 

பாபா ராம்தேவ் அலோபதி குறித்து மட்டுமல்லாமல், இஸ்லாம், கம்யூனிசம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments