Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய விளம்பர வழக்கு.. முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

Baba Ramdev

Mahendran

, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (13:07 IST)
ஆங்கில மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம் செய்த பாபா ராம்தேவ் இனிமேல் தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்று உறுதி அளித்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அலோபதி மருத்துவம் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாக பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மீது இந்திய மருத்துவர்கள் சங்கம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது எந்த ஒரு மருத்துவ முறைக்கும் எதிராக கருத்து தெரிவிக்க கூடாது என்றும் தவறான விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்றும் பதஞ்சலி நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவை மீறி பதஞ்சலி நிறுவனம் தொடர்ந்து சர்ச்சைக்குரிய விளம்பரங்களை வெளியிட்டதால் நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு தெரிவித்ததோடு மன்னிப்பு கோரி நாளிதழில் விளம்பரம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து மன்னிப்பு கோரி பாபா ராம்தேவ் தரப்பில் நாளிதழில் விளம்பரம் அளிக்கப்பட்டதை அடுத்து இனிமேல் தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு இந்த வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர்.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடன் தொல்லை.. தற்கொலைக்கு முன் செல்பி எடுத்த இளம் தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்..!