Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வன்முறையாக மாறிய போராட்டம் - விவசாயி ஒருவர் உயிரிழப்பு!

Advertiesment
வன்முறையாக மாறிய போராட்டம் - விவசாயி ஒருவர் உயிரிழப்பு!
, செவ்வாய், 26 ஜனவரி 2021 (17:01 IST)
விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். தற்போது நிலைமை கைமீறிப் போன நிலையில் போராட்டத்தில் முழு வீச்சில் இறங்கிய விவசாயிகள் டெல்லி முழுவதும் பேரணியாக சென்று டெல்லி செங்கோட்டையின் உச்சியில் விவசாயிகள் தங்கள் விவசாய கொடியை ஏற்றினர். 
 
இதையடுத்து போலீசார் அவர்களை கலைக்களப்புடன் களைந்து செல்ல கூறியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது விவசாயிகள் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அங்குள்ள விவசாயிகள் அவர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்ததாக குற்றம் சாட்டும் நிலையில் டெல்லி காவல்துறை, விவசாயிகளின் டிராக்டர் மோதி தான் அவர் உயிரிழந்தார் என விளக்கம் கொடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பத்மவிருதுகள் பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வாழ்த்து கூறிய முதல்வர்!