டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண்மை சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநில விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது என்பதும் அனைத்து பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் நாளில் அதே இடத்தில் டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்து டிராக்டர் பேரணியை துவங்கினர். டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு அமல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.