பயங்கரவாதிகளை தாக்கி அழித்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக அறிமுகமான சேலைகள் ட்ரெண்டாகி வருகின்றன.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். அதை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.
இந்த ஆபரேஷன் சிந்தூர் பெயரில் படம் எடுப்பதற்காக 30க்கும் மேற்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பெயரை பதிவு செய்யப் போட்டிப் போட்டு வருகின்றனர். மக்களிடையே ஆபரேஷன் சிந்தூருக்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்து ஏராளமான பொருட்களும் தயாரித்து விற்பனைக்கு வருகின்றன.
அவ்வாறாக ஆபரேஷன் சிந்தூரை போற்றும் விதமாக பனாரஸ் புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என்று பார்டர் வைத்து உள்ளே இந்திய ராணுவத்தின் ப்ரமோஸ் ஏவுகணை, ரபேல் விமானங்கள், ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் போன்றவற்றின் படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புடவை தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Edit by Prasanth.K