தமிழிசையிடம் தெலங்கானா முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – தெலங்கானா பாஜக கண்டனம் !

புதன், 11 செப்டம்பர் 2019 (09:10 IST)
ஆளுநர் நியமனம் குறித்து தெலங்கானா மாநில அரசின் மக்கள் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்காக மாநில அரசு ஆளுநரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டுமென பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன்  மூன்று தினங்களுக்கு முன் தெலங்கானாவில் அந்த பதவியை ஏற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கலந்துகொண்டார். ஆனால் அன்று அன்றைய தினமே முதல்வர் சந்திரசேகர ராவின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியான நரசிம்ம ராவ் என்பவர் ஆளுனர் நியமனத்தில் மத்திய அரசு தலையீடு உள்ளது என்றும் மாநில அரசின் செயல்பாடுகளில் இவ்வாறு குறுக்கிடுகிறது என்றும் எழுதியிருந்தார்.

இதற்கு தெலங்கானா மாநில பாஜகவினர் கடுமையாக எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மாநில அரசிடம் சம்பளம் பெறும் ஒருவர் இது போல பேசுவது கேள்விக்குறியது. இது புதிதாக பதவியேற்றுள்ள ஆளுநரை அவமதிப்பது போலாகும் எனவும், இதற்காக தெலங்கானா முதல்வர் ஆளுநரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ஆனால் மக்கள் தொடர்பு அதிகாரி தமிழிசையைக் குறிப்பிட்டு சொல்லாமல் பொதுவாகவே அந்த கட்டுரையை எழுதியதாகக் குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் காஷ்மீரை பிரிக்க 3 நபர் குழு.. மத்திய அரசு அதிரடி