பங்குச்சந்தை நேற்று காலை சரிந்த நிலையில் பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்தது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று போலவே இன்றும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை வர அளித்துள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் உயர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 73 ஆயிரத்து 963 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 72 புள்ளிகள் உயர்ந்து 22475 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ச்சியாக இரண்டு நாள் பங்குச் சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்களுக்கு நிறைய லாபம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர் , ஐசிஐசி வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.