இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜூன் நான்காம் தேதி தேர்தல் ரிசல்ட் பின்னர் ஆவது பங்குச்சந்தை உயருமா என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து குறைந்து வருகிறது என்பதும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 245 புள்ளிகள் குறைந்து 72 ஆயிரத்து 744 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 87 புள்ளிகள் குறைந்து 22,128 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பெரிய அளவில் சரிவில்லை என்பது ஒரு ஆறுதலாக உள்ளது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.