Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிரஞ்சீவிக்கு தங்கையான சாய் பல்லவி… எந்த படத்தில் தெரியுமா?

webdunia
  • facebook
  • twitter
  • whatsapp
share
சனி, 12 செப்டம்பர் 2020 (16:57 IST)
வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ள நிலையில் லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளார்.

2015 ஆம் ஆண்டு அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி. இந்த படத்தை மெஹர் ரமேஷ்  இயக்க தமிழில் தயாரித்த ஏ எம் ரத்னமுடன் இணைந்து ராம்சரணும் தயாரிக்க உள்ளார். இப்போது அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி மொட்டை அடித்து தனது கெட் அப்பை மாற்றியுள்ளார்.

இந்நிலையில் வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லஷ்மி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இப்போது அதற்கான விடைக் கிடைத்துள்ளது. பிரேமம் படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள ரசிகர்களைக் கவர்ந்த சாய்பல்லவிதான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:
  • facebook
  • twitter
  • whatsapp

Follow Webdunia Hindi

அடுத்த கட்டுரையில்

webdunia
நிவேதா தாமஸா இப்படி? கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு கவன ஈர்ப்பு!