தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது 
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இந்த நிலையில் தமிழகத்தில் பருவ மழையால் ஏற்படும் பாதிப்பு குறித்த நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது 
	 
	இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்
	 
	 சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதை அடுத்து முதலமைச்சர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார்
	 
	இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க நாளை ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது