லிங்குசாமி படத்தின் வில்லன் இந்த தமிழ் ஹீரோ தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (13:47 IST)
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் பிரபல தெலுங்கு நடிகர் ராம்பொத்தினேனி நடிக்கும் இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வில்லனாக பிரபல ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அந்த வகையில் மாதவன் மற்றும் ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது தமிழ் ஹீரோக்களில் ஒருவரான ஆதி இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரித்து வரும் சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதி இந்த படத்தில் இணைந்தது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தில் ஆதி தான் வில்லன் என்று கேட்டதற்கு உறுதியாகியுள்ளது
 
மேலும் லிங்குசாமி இயக்கி வரும் திரைப்படத்தில் தான் இணைந்ததை ஆதியும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பாட்டுதான் ரிலீஸ் ஆச்சு! அடுத்த படத்திலும் அதே ஹீரோயினை லாக் செய்த சிவகார்த்திகேயன்

சேலையில் ஜொலிக்கும் க்ரீத்தி … அழகிய புகைப்படத் தொகுப்பு!

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் அசத்தும் ராஷி கண்ணா!

மாஸ்க் படத்துக்கு இன்னும் ஜி வி க்கு சம்பளம் தரவில்லை… வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

இயக்குனர் பாரதி கண்ணனை மிரட்டினார்களா கார்த்திக்கின் ரசிகர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments