Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகான் 100 ஆவது நாள்… வாணி போஜன் காட்சிகளை ரிலீஸ் செய்த படக்குழு!

மகான் 100 ஆவது நாள்… வாணி போஜன் காட்சிகளை ரிலீஸ் செய்த படக்குழு!
, வெள்ளி, 20 மே 2022 (17:13 IST)
மகான் படத்தில் வாணிபோஜன் நடித்திருந்த காட்சிகள் முழுவதும் நீக்கப்பட்டன.

விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சனத் மற்றும் சிம்ரன் நடிப்பில்  வெளியான மகான் திரைப்படம் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இது எல்லாவற்றையும் விட பெரிய ஏமாற்றமாக படத்தில் வாணிபோஜனை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு முக்கியமான வேடம் எனவும் படக்குழுவினர் விளம்பரப்படுத்தினர். ஆனால் படத்தில் ஒரு காட்சியில் கூட வாணிபோஜனைக் காணவில்லை. இது குறித்து ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மீம்ஸ்களாகவும் ட்ரோல்களாகவும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வாணி போஜன் காட்சிகள் பற்றி பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இரண்டாம் பாதியில் விக்ரம்மின் காதலியாக வாணி போஜன் சில காட்சிகள் படமாக்கி இருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரின் மீதிக் காட்சிகளைப் படமாக்க முடியவில்லை. அதனால் எடுத்த சில காட்சிகளை நீக்கினோம்’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது மகான் திரைப்படம் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் வாணிபோஜன் நடித்துள்ள நீக்கப்பட்ட காட்சிகளை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி பொன்ராம் படத்தின் ரிலீஸ் எப்போது? சன் பிக்சர்ஸின் முடிவு!