Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் 30 வரை ரயில்கள் ரத்து என்பது தவறான தகவல்: ரயில்வே துறை விளக்கம்

Advertiesment
செப்டம்பர் 30 வரை ரயில்கள் ரத்து என்பது தவறான தகவல்: ரயில்வே துறை விளக்கம்
, திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (19:27 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ரயில்கள் உள்பட எந்த போக்குவரத்தும் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்டு 31 வரை ரயில் போக்குவரத்து இல்லை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் ஒருசில ஊடகங்களில் செப்டம்பர் 30 வரை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
ஆனால் இது குறித்து விளக்கமளித்த ரயில்வே துறை செப்டம்பர் 30 வரை ரயில் போக்குவரத்து தடை என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும் ரயில்வே துறை இது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து செப்டம்பர் 30 வரை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் வதந்தி என்பது உறுதியாகி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மூச்சுத் திணறல் சிகிச்சைக்குப் பின் பிரபல நடிகர் டிஸ்சார்ஜ்...