கொலவெறி என்ற ஒரு வார்த்தை இந்தப் படத்துக்கு போதும். படு சுமாரான டியூன் எப்படி உலகப் பிரபலமடைந்தது என்று இன்னமும் முடியை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த குழப்பத்தோடு குழப்பமாக படமும் வெளியாகிறது.
காதல் ஜோடி ஒன்றின் மூன்றுகட்ட காதல்தான் கதை என்கிறார்கள். ஆனாலும் ஐஸ்வர்யா எதை எடுத்திருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது. அவரே கதை, திரைக்கதை, வசனம். டிஆர் தோற்றார். இவரது குறும்படங்களுக்கு இசை அமைத்த அனிருத் இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார். தெரியாமல் ஹிட்டான கொலவெறியை நம்பி கண்டெயினர் நிறைய சம்பளம் கேட்கிறாராம் இந்தத் தம்பி. தனுஷ், ஸ்ருதிஹாசன் இந்தப் படத்திற்கு பணம் செலவளிக்காமலே விளம்பரம் தேடித் தந்ததை அனைவரும் அறிவர். படத்தில் இவர்கள் கெமிஸ்ட்ரி ஆஹா ரகம் என்கிறார்கள். கஸ்தூரிராஜா படத்தை தயாரித்துள்ளார்.கொலவெறி புகழ் காரணமாக தெலுங்கில் பல கோடி கொடுத்து உரிமை வாங்கியிருக்கிறார்கள். அதற்கு மரியாதை செய்யும் விதமாக தமிழில் ஆடியோவை வெளியிடுவதற்கு முன் தெலுங்கு ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த சென்சார் யு சான்றிதழ் தந்திருக்கிறது. இம்மாதம் 30ஆம் தேதி படம் வெளியாகிறது.தமிழில் படத்தை ஏலமிடலாமா என்று கஸ்தூரிராஜா யோசிக்கிறாராம். அவ்வளவு டிமாண்ட். கலைத்தாயே... என்ன நடக்கிறதிங்கே?