தங்கம் விலை கடந்த நான்கு நாட்களாக விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7215 என்று விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் உயர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 10 ரூபாய் உயர்ந்து 7,225 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 80 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 57,800 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,881 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.