Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ. 2197 கோடி நஷ்டம்; உபெர் ஈட்ஸ் ஸொமாட்டோவுக்கு கைமாறியது எப்படி?

ரூ. 2197 கோடி நஷ்டம்; உபெர் ஈட்ஸ் ஸொமாட்டோவுக்கு கைமாறியது எப்படி?
, புதன், 22 ஜனவரி 2020 (11:41 IST)
உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் ஸொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதன் பின்னணி என்ன என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஆன்லைன் உணவு விநியோக தொழிலில் ஸொமாட்டோ, ஸ்விக்கி மற்றும் உபர் ஈட்ஸ் போன்ற நிறுவனங்கள் கோலோச்சி வந்தன. 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உணவு விநியோகத்தில் கால்பதித்த உபர் ஈட்ஸ் நிறுவனம் 41 நகரங்களில் சுமார் 26,000 உணவகங்களைக் கைவசம் வைத்திருந்தது.
 
ஆனால் போட்டியை சமாளிக்க முடியாத உபெர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஸொமாட்டோவுடன் விற்பனைப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருந்தது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வந்து உபர் ஈட்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் முழுவதையும் சொமாட்டோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. உபெர் ஈட்ஸ் சோமேட்டோ ஒப்பந்தத்தின் மதிப்பானது 300 - 350 மில்லியன் டாலர் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிந்த கடைசி 5 மாதங்களில் மட்டும் ரூ. 2197 கோடி அளவுக்கு உபெர் ஈட்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் உள்ள தனது வர்த்தகத்தை ஸொமாட்டோவிடம் விற்றுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியை பாத்து பயப்பட நாங்க திமுக இல்ல! – அமைச்சர் ஜெயக்குமார் நறுக் பதில்!