Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Siva
திங்கள், 8 ஏப்ரல் 2024 (11:10 IST)
ஒரு பக்கம் தங்கம் விலை உச்சத்தில் சென்று கொண்டிருப்பதால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்னொரு பக்கம் பங்குச்சந்தையும் உயர்ந்து கொண்டிருப்பதால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்பதும் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 74,608 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆனால் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 22622 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கொண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ள நிலையில் இனி வரும் நாட்களிலும் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை உச்சம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கரூர் வைசியா வங்கி, ஐடி பீஸ் சவுத் இந்தியன் வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments