பங்குச்சந்தை நேற்று மிகப்பெரிய அளவில் உயர்ந்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக சென்செக்ஸ் வர்த்தகமானது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் 74 ஆயிரம் என்ற உச்சத்தை அடைந்த சென்செக்ஸ் இன்றும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்ந்து 74,055 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 22,479 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்டு பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்து வருவதாகவும் சிப்லா, ஐடி பீஸ், ஐடிசி ஆகிய பங்குகள் சரிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் வரை ஏற்ற இறக்கத்துடன் பங்குச்சந்தை இருக்கும் என்றும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை மீண்டும் உச்சம் பெறும் என்றும் இன்னும் ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்களில் சென்செக்ஸ் ஒரு லட்சத்தை தொட்டுவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.