நேற்று இறங்கிய பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (10:31 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை இறங்கியதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று மீண்டும் பங்கு சந்தை உயர்ந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 113 புள்ளிகள் அதிகரித்து 71842 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 21808  என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட நாள் முதலீடாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேபிடல், ஐடிசி, சிப்லா, பேங்க் பீஸ் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் கோல்ட் பீஸ், ஐடி பீஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வேலாம் சும்மா!.. தளபதியை ஏமாத்துறாங்க!.. புலம்பும் தவெக நிர்வாகிகள்!....

பாதை மாறி சென்ற ரேபிடோ பைக் ஓட்டுனர்.. பைக்கில் இருந்து குதித்து தப்பிய இளம்பெண்..!

சாமிய ஊர்வலம் கொண்டு போய் கோவிலுக்குள்ள வைக்கணும்!.. விஜயை கொண்டாடும் ஈரோடு தவெக நிர்வாகிகள்..

டெல்லியில் மெஸ்ஸி.. விராத் கோஹ்லியுடன் கால்பந்து விளையாடுகிறாரா? மோடி, அமித்ஷாவுடன் சந்திப்பு..!

ஆகாஷ் பாஸ்கரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு.. அமலாக்கத்துறை என்ன செய்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments