Publish Date: Mon, 08 Jan 2024 (10:59 IST)
Updated Date: Mon, 08 Jan 2024 (11:01 IST)
கடந்த வாரம் பங்குச்சந்தை ஓரளவு ஏற்றம் கண்ட நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று 214 புள்ளிகள் சரிந்து 71,812 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை அனுப்பி 71 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 641 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
வாரத்தின் முதல் நாளை பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டாலும் இனிவரும் நாட்களில் ஏற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதில் லாபகரமானது என்றும் தகுந்த ஆலோசனை பெற்று சரியான பங்கில் முதலீடு செய்யவும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்