Publish Date: Tue, 13 Dec 2022 (11:21 IST)
Updated Date: Tue, 13 Dec 2022 (11:23 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நேற்று பங்கு சந்தை திடீரென சரிந்தது என்றும் ஆனால் மாலையில் ஓரளவு உயர்ந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் திருப்தி அடைந்து உள்ளனர். பங்குச்சந்தை சென்செக்ஸ் 2890 புள்ளிகள் உயர்ந்து 62 ஆயிரத்து 424 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 73 புள்ளிகள் உயர்ந்து 18570 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பங்குச்சந்தை மீண்டும் 63 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது முதலீட்டாளர்கள் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது