அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதம் குறைப்பு: உச்சத்தில் இந்திய பங்குச்சந்தை..!

Siva
வியாழன், 19 செப்டம்பர் 2024 (10:02 IST)
அமெரிக்காவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், அதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தையில் வெளிப்பட்டுள்ளது.
 
அமெரிக்கா ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் குறைவு காரணமாக, இந்திய பங்குச் சந்தை உச்சத்திற்கு சென்றதாகவும், பங்குச் சந்தை ஆரம்பத்திலேயே சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று மாலைக்குள் பங்குச் சந்தை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
சற்றுமுன் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 83,530 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்கு சந்தை 150 புள்ளிகள் உயர்ந்து 25,528 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதுடன், பஜாஜ் பைனான்ஸ், எச்.சி.எல் டெக்னாலஜி, உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதா இந்தியா? - ட்ரம்ப் பேசியது குறித்து மத்திய அரசு விளக்கம்!

நாமக்கல் சிறுநீரக முறைகேடு: சட்டமன்றத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

மயக்க மருந்து கொடுத்து மனைவியை கொலை செய்த டாக்டர்.. 6 மாதங்களுக்கு பின் வெளியான உண்மை..!

25 திருநங்கைகள் கூட்டாக பினாயில் குடித்து தற்கொலை முயற்சி. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments