Publish Date: Tue, 10 Sep 2024 (11:30 IST)
Updated Date: Tue, 10 Sep 2024 (11:31 IST)
பங்குச்சந்தை நேற்று ஆரம்பத்தில் சரிந்தாலும் அதன் பின்னர் மதியத்திற்கு மேல் திடீரென உயர்ந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 215 புள்ளிகள் உயர்ந்து 81, 770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 990 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜி, ஐடிசி, இன்போசிஸ் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல் பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.