Publish Date: Tue, 03 Sep 2024 (09:23 IST)
Updated Date: Tue, 03 Sep 2024 (09:24 IST)
பங்குச்சந்தை வர்த்தகம் கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று சிறிய அளவில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பங்குச்சந்தை வர்த்தகம் சில நிமிடங்களுக்கு முன் தொடங்கியுள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 44 புள்ளிகள் குறைந்து 82515 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 13 புள்ளிகள் குறைந்து 25,275 ஐந்து என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளதால் மீண்டும் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கல்யாண ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் இருப்பதாகவும் கோல்ட் பீஸ், ஐடி பீஸ், ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.