Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. ஆனால் நேற்று போல் ஆகிவிடுமா?

Siva
புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:45 IST)
இந்திய பங்குச் சந்தை இரண்டு நாள் சரிவுக்கு பிறகு இன்று ஏற்றம் கண்டுள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர். 
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்திய பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு 15 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று பங்குச் சந்தை காலையில் உயர்ந்தாலும், அதன் பிறகு மதியத்திற்கு மேல் சரிய ஆரம்பித்தது என்பதும் 100 புள்ளிகளுக்கு மேல் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சற்று முன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 778 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 360 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. நேற்றும் இதே போல் தான் வர்த்தக ஆரம்பத்தில் 700 புள்ளிகள் உயர்ந்த நிலையில் அதன் பின்னர் திடீரென சரிந்தது. அதேபோல் இன்றும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் தேசிய பங்குச் சந்தை நிப்டி இன்று 259 புள்ளிகள் உயர்ந்து 24, 247 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: ரூ.15 கோடி ஒதுக்கீடு..!

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி வல்லவ ப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை!

சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்.. சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!

28 மாணவிகள் கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்! - ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேமராமேன்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments