இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பங்குச்சந்தை நேற்று காலை சரிந்து இருந்தாலும் மாலையில் ஓரளவு உயர்ந்தது என்ற நிலையில் இன்று காலை பங்குச்சந்தை ஆரம்பமான முதலே உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்து 77 ஆயிரத்து 515 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 574 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஓரளவு உயர வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வாங்கி, எச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.