பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இன்று திடீரென சிறிய அளவில் பங்குச்சந்தை குறைந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே குறைவான அளவில் சரிந்து உள்ளது. சற்று முன் சென்செக்ஸ் 163 புள்ளிகள் குறைந்து 77 ஆயிரத்து 199 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி வெறும் 24 புள்ளிகள் மட்டும் குறைந்து 23 ஆயிரத்து 432 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை தொடர்ச்சியாக உயர்ந்த நிலையில் இன்று சிறிய அளவில் குறைந்திருப்பது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஆனால் அதே நேரத்தில் இன்று மதியத்திற்கு மேல் பங்கு சந்தை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி ,ஐசிஐசி வங்கி ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.