Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் ஒரே நாளில் 600 புள்ளிகள் குறைவு..!

Siva
திங்கள், 13 மே 2024 (11:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியது முதலில் சரிவில் இருந்து வரும் நிலையில் சற்று முன் 645 புள்ளிகள் சரிந்து 72,021 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 193 புள்ளிகள் குறைந்து 21,822 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளே சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திருந்தாலும் இனிவரும் நாட்களில் பங்கு சந்தை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் லீவர், உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் ஆக்சிஸ் வாங்கி, ஏர்டெல் , எச்டிஎப்சி வங்கி,  ஐசிஐசி வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments