Publish Date: Mon, 22 Apr 2024 (11:23 IST)
Updated Date: Mon, 22 Apr 2024 (11:24 IST)
வாரத்தின் முதல் நாளான என்று இந்திய பங்குச் சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் காரணமாக பங்குச்சந்தை மிக வேகமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம்
இந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் உள்ளது என்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 369 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 449 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன்டி 128 புள்ளிகள் உயர்ந்து 22275 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. வாரத்தின் முதல் நாள் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கோல்ட் பீஸ், ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ், உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.