பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை முதல் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருகிறது என்பதும் சற்றுமுன் 458 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 399 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 22,3 12 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
நேற்று பங்குச் சந்தை ராமநவமியை முன்னிட்டு விடுமுறை என்ற நிலையில் இன்று பங்குச்சந்தை உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் தேர்தல் வரை கவனமாக முதலீடு செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.