Publish Date: Thu, 22 Oct 2020 (11:29 IST)
Updated Date: Thu, 22 Oct 2020 (12:11 IST)
கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.24 விலை உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை நேற்று மாலை நிலவரப்படி ரூ.37,736 விற்பனை ஆகிறது. இன்று ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ரூ.4,720 விற்பனையாகிறது.